திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உட்கட்சி பூசலில் பெண் பாஜக பிரமுகர் சகோதரிக்கு மண்டை உடைப்பு; கும்பலாக சேர்ந்து பகீர் சம்பவம்.!
சென்னையில் உள்ள கோட்டூர்புரம், பாரதி அவென்யூ பகுதியை சார்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி தேவி. தேவியின் தங்கை ஆண்டாள். இவர் தமிழ்நாடு பாஜகவில் மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த ஜனவரி 19ம் தேதி பிரதமர் வருகைக்காக அப்பகுதியைச் சார்ந்தவர்களை அழைத்து வருவது சம்பந்தமாக, ஆண்டாளுக்கும் - அப்பகுதியில் பாஜக மகளிர் அணி மண்டல தலைவராக இருக்கும் நிவேதா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 21ஆம் தேதி ஆண்டாளும், தேவியும் அவர்களின் வீட்டில் இருந்தபோது பாஜக அமர் பிரசாத் ரெட்டியின் ஓட்டுநர் ஸ்ரீதர் என்பவர், கட்சியின் பிற நிர்வாகிகள் நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகிய பிரமுகர்களுடன் சம்பந்தப்பட்ட சகோதரிகளின் வீட்டிற்கு வந்து இருக்கிறார்.
அங்கு அமர்பிரசாத் ஆண்டாளிடம் பணம் கொடுத்துள்ளதாகவும், அந்த பணத்தில் எங்களுக்கு பங்கு இருப்பதால் அதனை கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டி இவர்களை தாக்கியதாகவும் தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் தேவியின் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சென்று அனுமதியாகியுள்ளார்.
அரசியல் சார்ந்த சண்டை என்பதால் மருத்துவமனையில் அனுமதியாகி 2 நாட்கள் அமைதியாக இருந்த ஆண்டாள், இது குறித்து நேற்று கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.