திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் போறீங்களா?.. அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.!
ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு, தலைநகர் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அரசின் சார்பில் போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது. தற்போது, ஆயுத பூஜையையொட்டி 30 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை பேருந்து சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், மற்றும் சிதம்பரம் வழியாக ஈசிஆர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூர், திருவனந்தபுரம், மற்றும் குருவாயூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் சம்பந்தப்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து தங்களின் சொந்த ஊர் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.