திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திடீரென பேச மறுத்த காதலன்; வீடியோ காலில் உயிரை விட்ட பெண் காவலர்..! சென்னையில் நடந்த சோகம்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மார் பகுதியில் வசித்து வருபவர் சுகந்தி (வயது 25). தற்போது கோயம்பேடு சேம்மாத்தம்மன் தெருவில் இருக்கும் இளைய சகோதரர் வீட்டில் தங்கி இருக்கிறார்.
தலைமை செயலக காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வரும் சுகந்தி, தம்பியின் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பண்ணிக்கு சென்றவர், மதியம் வீட்டிற்கு வந்து சமையல் அறைக்கு சென்றுள்ளார். அங்கு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்குள் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சகோதரர் அக்காவை காண சமயலறைக்குள் சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சகோதரர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சுகந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் திருப்பூர் ஆயுதப்படையை சேர்ந்த காவலரை காதலித்து வந்துள்ளார்.
இருவரின் காதல் உறவு நல்லபடியாக தொடர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக காதலர் சுகந்தியிடம் பேசவில்லை. இதனால் காதலனிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரியவந்தது.