திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரியாணியில் சிக்கன் இல்லாததால் தகராறு; பாலியல் தொழிலாளி கழுத்தறுத்து கொலை.. 5 ஆண்டுகள் கழித்து அம்பலமான உண்மை..!
கடந்த 2019ம் ஆண்டு கோயம்பேடு பூ மார்க்கெட் பகுதியில் இளம்பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, 30 வயது இளம்பெண் - வாலிபர் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு, சிக்கன் இல்லாததால் தகராறு நடந்து கொலை சம்பவம் அரங்கேறியது உறுதி செய்யப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்து கோயம்பேடு காவல் துறையினர், கொலையான இளம்பெண் யார்? வாலிபர் யார்? என விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், பெண்மணி மெரினா கடற்கரை பகுதியில் பாலியல் தொழில் செய்துவந்த தேவி (வயது 30) என்பது உறுதியானது.
இவருடன் மார்க்கெட் பகுதிக்கு வந்தவர் யார்? என தெரியவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருக்க, தேவியுடன் வந்தது செய்யார் பகுதியை சேர்ந்த குணா (வயது 44) என்பது தெரியவந்தது. இவர் மனைவியை பிரிந்து கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் உறுதி செய்யப்பட்டது.
தற்போது காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.