திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னையில் மின்னல் தாக்கி சோகம்; பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த கல்லூரி மாணவர் பரிதாப பலி.!
சென்னையில் உள்ள பூந்தமல்லி பகுதியைச் சார்ந்த இளைஞர் பசம் வினய்குமார். இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் இன்று செட்டிபேடு பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.
அப்போது, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த இளைஞரின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூரைச் சார்ந்த பசம் வினய்குமார் பூந்தமல்லியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.