திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னை புறநகர் மின்சார இரயிலில் பயணம் செய்ய இது தேவையில்லை - தென்னக இரயில்வே அதிரடி.!
மின்சார இரயிலில் பயணம் செய்ய தடுப்பூசி சான்றிதழ் தேவை கிடையாது என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக, அதனை கட்டுப்படுத்த அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. சென்னையை பொறுத்த வரையில் மின்சார இரயில்கள் மக்களால் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதனால் இரயில் பயணசீட்டு பெறுவதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் மக்களுக்கு ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்யவும், சீசன் டிக்கெட் பெறவும் கொரோனா சான்றிதழ் தேவை இல்லை என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. மேலும், DUS என்ற செயலி மூலமாகவும் புறநகர் இரயில் பயணத்திற்கான பயணசீட்டுகளை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிப். 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.