மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயதுக்கு வந்த மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளி உணவுப்பொருட்கள் வாங்கிய தாய் : பதறவைக்கும் உண்மை தகவல்.!
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வருமானத்தை இழந்த மக்கள், பிழைப்புக்காக பாலியல் தொழிலில் ஈடுபட்ட துயரத்தின் பகீர் உண்மை அம்பலமாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்மணி தனியார் யூடியூப் நிறுவனத்திற்கு பேட்டியளித்து வருகிறார். இதுகுறித்த காணொளியில் அவர் பேசுகையில், "பாலியல் தொழில் என்பது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. இன்றுள்ள இணைய வாழ்க்கையில் அனைத்தும் கையில் கிடைக்கிறது. பாலியல் தொழிலுக்கு வரும் பெரும்பாலான பெண்கள் தங்களின் குடும்ப வறுமையை போக்க விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
சிலர் தங்களின் கணவர் அந்தரங்க வாழ்க்கையில் சரிவர செயல்படவில்லை. பாலியல் தொழிலுக்கு சென்றால் பணத்துடன் சுகம் கிடைக்கும் என்று நினைத்தும் வருகிறார்கள். இதில் வறுமையே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் பல்வேறு வகைகளில் அல்லல்பட்டனர். ஒரு பெண்ணின் தாய் தனது வயதுவந்த மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அரிசி, பருப்பு வாங்கி குடும்பத்திற்கு சமைத்து கொடுத்தார்.
எனது மகளை அதனாலேயே நான் பெங்களூரில் இருக்கும் தங்கையின் வீட்டிற்கு அனுப்பி வைத்து படிக்க வைத்தேன். அவள் இன்று நன்றாக படித்து கல்லூரியில் பேராசிரியையாக இருக்கிறார். அன்று எனக்கு உதவி செய்யாத உறவினர்கள், இன்று என்னை சந்திக்க வருகிறார்கள். இதனை நினைத்து நான் பெருமைகொள்கிறேன். எதுவும் இல்லாமல் பள்ளத்தில் விழுந்து, வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இவரின் வாக்குமூலப்படி கொரோனா காலத்தில் பாலியல் தொழில் நடந்ததும், அதில் பல சிறுமிகளை தாயே ஈடுபட வைத்த துயரமும் அம்பலமாகியுள்ளது.