மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை குடும்பம் நடத்த அனுப்பாததால் சம்பவம்.. மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்..!
தன்னுடன் மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்காத காரணத்தால் மாமியாரை மருமகன் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. மைத்துனரின் உயிர் மருத்துவமனையில் ஊசலாடி வரும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள மடிப்பாக்கம் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 40). இவரின் மனைவி கீதா (வயது 35). தம்பதிகளுக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது. 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக தம்பதியடையே ஏற்பட்ட தகராறில், கீதா தனது தாயாரின் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார். ஆறுமுகம் தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்தும் பலனில்லை. மேலும், அதற்கு மாமியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் நேற்று முன்தினம் இரவில் மதுபோதையில் மாமியாரின் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்த ஆறுமுகம், மனைவியை தன்னுடன் அனுப்ப சண்டையிட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஆறுமுகம் மாமியார் சித்ராவின் கழுத்துப்பகுதியில் கத்தியால் குதித்தியுள்ளார். இதனை தடுக்க வந்த மைத்துனர் உதயகுமாரின் வயிற்றிலும் கத்திக்குத்து விழுந்துள்ளது.
சித்ரா மற்றும் உதயகுமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இதில், சித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மடிப்பாக்கம் காவல் துறையினர், ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.