மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
6 ஆவது மாடியில் இருந்து குதித்து 8 ஆம் வகுப்பு சிறுவன் தற்கொலை.. அம்மா, அப்பா, அண்ணா.., தற்கொலை குறிப்பில் கண்ணீர் சோகம்.!
13 வயது சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரத்தில், சிறுவனின் கடிதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மதுரவாயல், அடையாளம்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் "பி" பிளாக்கில் உள்ள 6 ஆவது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அருண் சவுன் (வயது 42). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மகன் ஆருஷ் (வயது 13). ஆருஷி அய்யப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவில் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு உறங்கிவிட, அதிகாலை எழுந்து பார்த்தபோது ஆருஷ் வீட்டில் இல்லை. அவனை அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தேடிய நிலையில், "சி" பிளாக் முதல் தள பால்கனியில் சிறுவன் இரத்த வெள்ளத்தில் பிணமாக இருப்பதை கண்டு பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக மதுரவாயல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுவன் ஆருஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆருஷின் தந்தை தனது மகனை மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். ஆனால், இதற்கு ஆருஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் இருந்தவாறு செல்போனும் கையுமாக இருந்த மகனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஆருஷ் மனஉளைச்சலோடு இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு சாப்பிட்டு உறங்கிய ஆருஷ், நள்ளிரவில் "சி" பிளாக் பகுதிக்கு வந்து தற்கொலை செய்துள்ளார்.
சிறுவனின் தற்கொலை கடிதத்தில், "எனக்கு அதிகளவு மனஅழுத்தம் உள்ளது. அதனை என்னால் தங்க இயலவில்லை. என் முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. அம்மா உடல்நலத்தை நன்றாக பார்த்துக்கொள். அப்பா எப்போதும் காமெடியாக பேச வேண்டும். அண்ணா மன்னித்துவிடு" என்று எழுதப்பட்டு இருந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.