மருமகள் மீது சூடான எண்ணெய் ஊற்றி கொலை செய்த மாமியாருக்கு உச்சகட்ட தண்டனை.. மகிளா நீதிமன்றம் அதிரடி.!



chennai-mambalam-2014-daughter-in-law-murder-case-mahil

மருமகளை கொலை செய்த மாமியாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சென்னையில்  உள்ள மாம்பலத்தை சார்ந்தவர் ஷாகின் (வயது 25). இவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். ஷாகினின் மாமியார் தாஜ் நிஷா. மாமியார் - மருமகள் அவ்வப்போது குடும்ப பிரச்சனை நடந்து வந்த நிலையில், அதனால் தகராறும் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கடந்த 2014 ஆம் வருடம் நவ. 26 ஆம் தேதியன்று மாமியார் - மருமகள் சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் இருந்த தாஜ் நிஷா மருமகள் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, எண்ணெயை கொதிக்கவைத்து ஊற்றி இருக்கிறார். 

chennai

இதனால் படுகாயமடைந்த ஷாகின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2014 டிச. 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாம்பலம் R1 காவல்துறையினர், தாஜ்நிஷாவை (வயது 50) கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு நீதிபதிகளால் நேற்று (2021, டிச. 29) வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டுள்ள தாஜ் நிஷாவின் குற்றங்கள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கபடுகிறது என்றும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.