மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13 வயது சிறுமி மெரினாவில் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு.. போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
மெரினா கடற்கரையில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பாடி, கலைவாணர் நகரில் வசித்து வந்த 13 வயது சிறுமி, கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் 20 ஆம் தேதி தோழியுடன் மெரினா கடற்கரைக்கு வருகை தந்துள்ளார்.
அப்போது, தோழிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்த 13 வயது சிறுமியிடம், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஆசைவார்த்தை கூறி ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தாய் திருவெல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றவாளியின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் செல்வராஜுக்கு 20 வருட சிறை தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டார். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.