திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. மெரினா பீச்சுக்கு வருவோருக்கு இப்படியான தடாலடி வசதி.. சென்னை மாநகராட்சி அசத்தல் திட்டம்.!
சென்னையில் உள்ள மெரினா கடற்கரைக்கு தினமும் இலட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். விடுமுறை நாட்களில் கோடிக்கணக்கான மக்கள் குவிந்துவிடுவார்கள். எங்கு திரும்பினாலும் கடற்கரை முழுவதும் மக்களின் தலைகளாகவே தெரியும்.
இந்த நிலையில், மெரினா கடற்கரையில் மாநகராட்சியின் சார்பில் இலவச இணையசேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மெரினாவுக்கு வருகை தரும் பொதுமக்கள் பலன்பெரும் வகையில் இந்த இலவச இணையசேவை வழங்கப்படவுள்ளது.
கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரையில் 5 இடங்களில் இலவச வைபை சேவையை வழங்க சென்னை மாநகராட்சி & தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இச்சேவை மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.