திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திடீரென சென்னை மெரினா கடற்கரையில் மணல் சூறாவளி; அதிர்ச்சியில் ஓடிய மக்கள்.. வைரல் வீடியோ உள்ளே.!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் திடீர் கனமழை பெய்து வருகிறது. இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொளுத்திய வெயிலின் தாக்கம் நீங்கி, மக்களுக்கு குளுகுளு சூழல் உருவானது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இரவு திடீரென மணல் சூறாவளி உருவானது. சூழல் காற்று புழுதி மணலை அள்ளிக்கொண்டு திடீரென வந்து பின் சாலைக்கு சென்று மாயமானது. இந்த வீடியோ அங்கிருந்தோரால் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மணல் சூழலில் இருந்து தப்பிக்க அங்கிருந்த மக்கள் நிகழ்விடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
Athu Vera Yaarum Ila Namma #Ayalaan UFO Than 👽 🫣🏃🏻♂️#MarinaBeach #Chennai pic.twitter.com/lwvnEXJnxS
— Kolly Corner (@kollycorner) October 16, 2023