திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீரா டாக்ஸ் யூடியூப் சேனலின் வீரத்தை மொத்தமாக ஊத்தி ஓடிய போலீஸ்.. ஆபாச பேட்டியெடுத்ததால் சம்பவம்.!
சென்னையில் வீரா டாக்ஸ் யூடியூப் சேனலின் பெண் வர்ணனையாளர் மற்றும் கேமராமேன் சேர்ந்து ஆபாசமான கேள்விகளை மாணவ - மாணவிகளிடையே கேட்டு தங்களின் சேனலில் பதிவேற்றியதாக தெரியவருகிறது. சம்பவத்தன்று, இவர்கள் இருவரும் மெரினா கடற்கரை பகுதியில் இளம் தலைமுறையிடையே ஆபாசமான கேள்விகளை கேட்டு வந்துள்ளனர்.
இதனைக்கண்ட வழக்கறிஞர் ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கேமராமேனிடம் கேமரா வாங்கி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். அங்கு பெண் வர்ணனையாளர் மற்றும் கேமாரனை எச்சரித்த அதிகாரிகள், அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.