மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வளர்ப்பு நாயை 4 ஆவது மாடியில் இருந்து தூக்கிவீசி கொலை செய்த பயங்கரம்..!
தன்னைப்பார்த்து குரைத்த நாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அயோத்திகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவர் ஆசை, ஆசையாக நாயொன்றை வளர்த்து வந்துள்ளார். குடிசைமாற்று குடியிருப்பு நான்காவது மாடியில் வசித்து வந்துள்ளார்.
நேற்றுமுன்தினத்தில், பிரவீன் வசித்து வந்த நான்காவது மாடிக்கு சிலர் வந்த நிலையில், அவர்களை பார்த்து நாய் குரைத்துள்ளது. அந்த நபர்கள் நாயை அன்பாக தடவிகொடுப்பது போல நடித்து, அதனை நான்காவது மாடியில் இருந்து தூக்கி கீழே வீசியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த நாய், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரவீன், மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் நாயை மாடியில் இருந்து தூக்கி கீழே வீசி கொலை செய்த சேப்பாக்கத்தை சார்ந்த ஸ்டெர்லின் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.