மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காற்று மாறுபாட்டால் இந்த இடங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் மாறுபாட்டின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலையானது 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகிய மழையளவில் நீலகிரியில் தலா 11 சென்டிமீட்டரும், கோயம்புத்தூரில் தலா 4 சென்டிமீட்டரும், சேலத்தில் தலா 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக மன்னர்வளைகுடா, குமரிகடல் பகுதியில் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.