தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை இடிமின்னலுடன் கூடிய கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திர கடலோர பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 1-ஆம் தேதி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
2-ஆம் தேதி மற்றும் 3, 4 ஆம் தேதிகளை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிகாற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.