திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கோடை மழை: தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும் சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், வேலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தென் தமிழகத்தை பொறுத்தவரை பெரம்பலூர், நாகை, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.