தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இன்று 13 மாவட்டங்களில் வெளுத்துவாங்கும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
காற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில் 23ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், செங்கல்பட்டு, திருப்பூர், தேனி, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக குமரிகடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.