மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
54 வயது மூதாட்டி பலாத்கார முயற்சி; 21 வயது இளைஞரின் அதிர்ச்சி செயல்.!
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த 54 வயது மூதாட்டி, தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரின் வீட்டருகே வசித்து வருபவர் நிதிஷ் குமார் (வயது 21).
சம்பவத்தன்று மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற நிதிஷ் குமார், அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மூதாட்டி சாதுர்யமாக தப்பிவிட, விஷயம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது.
அங்கு நிதிஷ் குமார் கடுமையான எச்சரிக்கைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மறுநாள் மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற நிதிஷ் குமார் செருப்பு எடுக்க வேண்டும் என சாக்குபோக்கு சொல்லி அத்துமீற முயன்றுள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். நிதிஷ் குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.