திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: கல்லூரி மாணவி காதலை ஏற்க மறுத்ததால் கத்திக்குத்து; சென்னையில் மீண்டும் பரபரப்பு சம்பவம்.. ஊசலாடும் உயிர்.!
சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி அஸ்மிதா. இவர் அடையாறு பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வருகிறார். இன்று மாலை கல்லூரியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல காத்திருந்துள்ளார்.
அப்போது, மாணவியை பின்தொடர்ந்து வந்த நவீன் என்ற இளைஞர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்த வீட்டில் சென்று ஒழிந்துகொண்டார்.
உயிருக்கு துடிதுடித்து அலறிய மாணவியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நவீனை கைது செய்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் மாணவி காதலை ஏற்க மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டது அம்பலமானது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.