திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மரத்தில் விழுந்த தலையணையை எடுப்பதில் அஜாக்கிரதை.. மின்சாரம் தாக்கி 17 வயது சிறுமி பலி.!
சென்னையை அடுத்துள்ள நங்கநல்லூர், இந்து காலனி 2 ஆவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மனோவ் பட்நாயக். இவரின் மகள் அனன்யா (வயது 17). சிறுமி அனன்யா தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இவரது வீட்டின் பால்கனி பகுதியில் காய வைத்திருந்த சிறிய தலையணையொன்று, அருகே இருந்த புங்கை மரத்தில் விழுந்துள்ளது. இதனைக்கண்ட சிறுமி அனன்யா, பால்கனியில் இருந்தவாறு அலுமினிய குழாய் உதவியுடன் தலையணையை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது, அலுமினிய கம்பி உயர் மின்னழுத்த கம்பியின் மீது எதிர்பாராத விதமாக உரசிவிடவே, அனன்யாவின் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில், அவரின் வலதுகை பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. வலியால் அலறிய மாணவி அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, அவரை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதி செய்த நிலையில், மருத்துவர்கள் அனன்யாவை பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பழவந்தாங்கல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.