மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓட்டுனரின் உறக்கத்தால் நேர்ந்த விபத்து; மனைவி, குழந்தைகளுடன் பயணித்த கணவர் பரிதாப பலி.!
சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியை சார்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அவர்களின் கார் நீலாங்கரை பகுதியில் சென்ற போது, தூக்கத்தில் இருந்த ஓட்டுநர் வாகனத்தை தொடர்ந்து இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருநாவுக்கரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.