#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னையில் 18,000 ஆயிரம் போலீசார் குவிப்பு: விதிகளை மீறினால் அவ்வுளவுதான் - உச்சகட்ட எச்சரிக்கை.!
உலகமே 2024ம் ஆண்டை கொண்டாட்டத்துடன் இன்று வரவேற்க தயாராகி வருகிறது. இதனால் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன.
தலைநகர் சென்னையில் பாதுகாப்பான புத்தாண்டு வரவேற்புக்கு, காவல் துறையினர் தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். நகரில் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, 18,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல, இரவு ஒரு மணி வரையை மட்டுமே விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மதுபானம் அருந்திவிட்டு வாகனங்களில் சாகசம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தையும் இரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கொண்டாட்டம் என்ற பெயரில் சாகசம் செய்யும் நபர்களை தடுக்கவும் நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.