மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிரடி வேட்டையை தொடங்கிய தனியார் ஆம்னி பேருந்துகள்.. கட்டணக்கொள்ளையால் சொந்த ஊர் திரும்பும் மக்கள் பதற்றம்.!
3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் தொலைதூர ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது.
கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்று பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து இலட்சக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனோர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தங்களின் குடும்பத்துடன் இன்பமாக கழிக்க விரும்பி சொந்த ஊர் செல்வது வழக்கம்.
நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 2-ம் சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் (13 & 14-ம் தேதி) வருகிறது. கூடுதலாக ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால், அன்றைய நாளும் அரசு விடுமுறை. இதனால் 3 நாள் தொடர் விடுமுறையையொட்டி பலரும் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனை தனக்கு சாதகமாக்கும் தனியார் பேருந்துகள் தங்களின் கட்டண கொள்ளையை ஆரம்பித்துள்ளனர்.
இயல்பாக பண்டிகை காலங்களில் தனியார் சொகுசு பேருந்துகள் சென்னையில் இருந்து கோவை, நெல்லை, மதுரை, திருச்சி, குமரிக்கு செல்ல கொள்ளையில் ஈடுபடுவதை போல கட்டணத்தை உயர்த்திக்கொள்ளும் நிலையில், தற்போதைய 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு இதனையே செய்துள்ளனர். இதனால் சொந்த ஊர் செல்லும் பலரும் கட்டணத்தை நினைத்து வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். அரசு சார்பாக சிறப்பு பேருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையை கட்டுப்படுத்த தனிப்படையும் நியமிக்கப்பட்டுள்ளது.