மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தூங்க இடம்பிடிப்பதில் தகராறு.. கூலித்தொழிலாளி ஓட்டுனரால் அடித்தே கொலை.. பாலத்துக்கு கீழ் நடந்த பயங்கரம்.!
சென்னையில் உள்ள பாடி மேம்பாலத்திற்கு கீழே, நேற்று முன்தினத்தில் ராஜ்குமார் என்ற கூலித்தொழிலாளி தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது நடந்த விசாரணையில், பாலத்திற்கு கீழ் உள்ள தர்பூசணி கடை அருகே தூங்க இடம்பிடிக்கும் தகராறில் கொலை நடந்தது அம்பலமானது. ஓட்டுநர் ஆல்பர்ட் என்பவர் ராஜ்குமாரை மரபலகையால் தலையில் அடித்தே கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆல்பர்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை நடந்த 12 மணி நேரத்தில் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்த அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.