மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தண்டவாளத்தை அலட்சியமாக கடக்க முயற்சி.. 25 வயது இளைஞர் மின்சார இரயிலில் அடிபட்டு மரணம்.!
இரயில்வே தண்டவாளத்தை அலட்சியமாக கடக்க முயன்ற இளைஞர், மின்சார இரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள எழும்பூர் - பூங்கா இரயில் நிலையத்திற்கு இடையேயுள்ள வழித்தடத்தில், நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார இரயில் மோதியதில், இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த எழும்பூர் இரயில்வே காவல் துறையினர், வாலிபரின் உடலை மீட்டு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வாலிபர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரயில் நிலைய நடைமேடைக்கு இடையே கடக்கும் போது, நடைமேடை பாலத்தை உபயோகம் செய்ய வேண்டும் என்றும், அலட்சியமாக யாரும் செய்லபட வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
Note: Both Images as Respective Templates