ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
WhatsApp-ல் ஆ., குரூப்., மகளிர் விடுதி காவலாளியாக காமக்கொடூரன்.. கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரம்.. அதிரவைக்கும் சம்பவம்.!
வாட்ஸப்பில் பணம் செலுத்தி ஆபாச படத்தை பார்த்து வந்த செக்யூரிட்டி, கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதியில் இருந்த மாணவியின் செல்போனுக்கு வாட்ஸப்பில் சுய இன்பம் செய்யும் விடியோவை அனுப்பி வைத்த பயங்கரம் நடந்துள்ளது. திருடன் கையில் சாவி என்பதை போல, காமக்கொடூரன் கையில் காவலாளி வேலை இருந்த பகீர் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள ஓ.எம்.ஆர் சாலை படூரில் தனியார் கலை & அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பி. காம் படித்துவந்த மாணவியின் வாட்சப் எண்ணுக்கு ஆபாச வீடியோ வந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி கல்லூரி முதல்வரிடம் முறையிட்டு இருக்கிறார். இதனையடுத்து, மாணவியின் செல்போனுக்கு வாட்ஸப்பில் ஆபாச வீடியோ அனுப்பியது யார்? என்ற விசாரணை நடந்துள்ளது.
விசாரணையில், பெண்களின் விடுதியில் காவலாளியாக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் (வயது 42) என்பது உறுதியாகவே, அவரை சிறைபிடித்து வைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், காவலாளி பாலசுப்பிரமணியத்தை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பின், இந்த விஷயம் தொடர்பாக கல்லூரி முதல்வர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் வழங்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி வைரவபிகுளம் கிராமத்தில் இருக்கும் மருதுபாண்டியர் தெருவில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணி. இவர் த்ரிலோசனா தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
படூரில் செயல்பட்டு வரும் கல்லூரியின் பெண்கள் தங்கும் விடுதிகள் காவலாளியாக பாலசுப்பிரமணி நியமனம் செய்யப்பட்ட நிலையில், மாணவிகளின் இன் & அவுட் பதிவேட்டில் இருந்து மாணவியின் செல்போன் நம்பரை எடுத்து வைத்துள்ளார். இந்த நம்பருக்கு தான் சுய இன்பம் செய்து அதனை வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். மேலும், தனது வாட்ஸப்பில் பணம் செலுத்தி ஆபாச வீடியோ பார்க்கும் குழுவிலும் இணைந்து இருக்கிறார். விசாரணைக்கு பின் பாலசுப்பிரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.