மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறிச்சோடி கிடக்கும் சென்னை OMR சாலை! அணைத்து கடைகளும் அடைப்பு! படுகுஷியில் வாகன ஓட்டிகள்!
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதையடுத்து, சென்னையில், இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று வெள்ளிக்கிழமை மற்றும், நாளை சனிக்கிழமை காலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வரை, அதேபோல் சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ECR ஆகியவற்றிலும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் செல்ல அனுமதி இல்லை என்று சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இரண்டு தலைவர்களின் வருகையையடுத்து மாமல்லபுரத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்று அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் OMR சாலைகளில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் விடுமுறையையும், சில நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து கொள்ளலாம் என (work from home) அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இன்று அதிகாலையில் இருந்து, பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற பயத்துடனே சென்றனர். ஆனால் அதற்கு மாறாக இன்று சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. OMR சாலையில் உள்ள அணைத்து கடைகளும் மூடப்பட்டு, இன்று எதோ விடுமுறை நாள் போலவே காட்சி அளிக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து அதிகாரிகளின் முன்னேற்பாடு தான் காரணம் என கூறுகின்றார்.
கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் செல்ல அனுமதிக்கப்படாததே இதற்கு காரணம் என கூறுகின்றனர். இன்று போக்குவரத்து நெரிசல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.