மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்தநாளை கொண்டாட அண்ணன் வராததால் சிறுமி விபரீத முடிவு.. விரக்தியில் உயிரை மாய்த்த பரிதாபம்.!
சென்னையில் உள்ள பெரும்பாக்கம், இந்திரா காந்தி தெருவில் வசித்து வரும் சிறுமி உதயகுமாரி (வயது 16). இவர், சித்தாலப்பாக்கம் அரசு மேல்நிலைபல்லயில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் உதயகுமாரிக்கு பிறந்தநாள். பிறந்தநாளை சிறப்பிக்க உதயகுமாரி திருவண்ணாமலையில் உள்ள அண்ணன் சந்திரனுக்கு நேரில் வர அழைப்பு விடுத்துள்ளார்.
அண்ணன் சந்திரன் வீட்டிற்கு வந்ததும் தம்பிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடலாம் என உதயகுமாரி இருந்த நிலையில், அன்று உதயகுமாரியின் தாய் - தந்தை வேலைக்கு சென்றுள்ளனர். பிறந்தநாளுக்கு எடுக்கப்பட்ட புத்தாடையை அணிந்த உதயகுமாரி, அண்ணனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்துள்ளார்.
ஆனால், அண்ணன் மாலை வராத நிலையில் விரக்தியடைந்த உதயகுமாரி, வீட்டிற்குள் இருந்த நைலான் கயிறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டில் இருந்த உதய குமாரியின் தம்பிகள் அபயக்குரல் கேட்டு சென்ற அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், சிறுமியை பரிசோதனை செய்துவிட்டு அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்து தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பெரும்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.