#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கஞ்சா, பெண்கள் பழக்கம் என உல்லாச வாழ்க்கை.. சூரமணியை நம்பி சென்ற இடத்திற்கே வந்த திருட்டுப்பய.!
போதைப்பழக்கம், பெண்கள் என உல்லாசமாக வாழ இருசக்கர வாகனத்தை திருடி விற்பனை செய்து பிழைத்து வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
சென்னையில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில், வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனம் அவ்வப்போது திருடுபோவதாக இருந்துள்ளது. இதுகுறித்து பெரும்பாக்கம் காவல் துறையினருக்கு தொடர் புகார்களும் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர் பிராங் டி ரூபன் உத்தரவின் பேரில், பெரும்பாக்கம் குற்றப்பிரிவு காவல் அதிகாரி கனகதாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
தனிப்படை காவல் துறையினர், இருசக்கர வாகனம் திருட்டு போன வீடுகளுக்கு அருகே பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்கையில், 2 பேர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. இந்த இரண்டு பேரில் ஒருவர் ஏற்கனவே இருசக்கர வாகன திருட்டுவழக்கில் சிக்கி சிறைக்கு சென்றதும் உறுதியானது. சி.சி.டி.வி காமிரா பதிவு உதவியுடன், இராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விஸ்வான் (வயது 21) என்பவர் கைது செய்யப்பட்டார்.
விஸ்வானிடம் நடந்த விசாரணையில் சென்னையில் தங்கியிருந்து பணியற்றுவது போல நடித்து, இருசக்கர வாகனத்தை திருடி விற்பனை செய்து வந்ததும், ஏற்கனவே காஞ்சிபுரம் பகுதியில் வாகன திருட்டு வழக்கில் சிக்கி 10 மாதம் சிறையில் இருந்ததும் தெரியவந்தது. சிறையில் இருந்து ஜாமினில் வந்த விஸ்வான், சென்னை பள்ளிக்கரணை, சேலையூர், மாதவரம், சிவகாஞ்சி பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு இருக்கிறார்.
சிறையில் இருக்கையில் கொலை வழக்கில் தொடர்புடைய மேடவாக்கம் பகுதியை சார்ந்த சூரமணி என்பவரின் உதவியுடன் வெளியே வந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்து கஞ்சா மற்றும் பெண்கள் பழக்கம் என உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது. விஸ்வான் மற்றும் சூரமணியை கைது செய்த காவல் துறையினர், இருவரையும் சிறையில் அடைத்தனர்.