மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிகாரியை தாக்கி தப்பி செல்ல முயற்சி.. தலைமறைவு ரௌடியை அதிரடியாக தூக்கிய காவல்துறை.!
தலைமறைவான குற்றவாளியை பிடிக்க சென்ற அதிகாரியை கத்தியால் வெட்டி தப்ப முயன்ற கைதி கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னை பெரும்பாக்கம் காவல் துறையினர், தனிப்படை அமைத்து பல்வேறு வழக்கில் தொடர்புடைய தலைமறைவு ரௌடியான நடராஜன் என்ற பாம்கை நடராஜனை (வயது 24) கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்நிலையில், நடராஜன் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் தனிப்படை அதிகாரிகளுக்கு தெரியவரவே, அங்கு தனிப்படை காவலர்கள் விரைந்து சென்றுள்ளனர். அப்போது, தனிப்படை காவல் அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க நடராஜன் முயற்சி செய்துள்ளார்.
மேலும், காவல் அதிகாரிகளை கத்தியால் வெட்டவும் முயற்சித்துள்ளார். அவரை மடக்கிப்பிடித்த காவல் துறையினர், அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவனின் மீது 26 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
26 வழக்கு விசாரணைக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நடராஜனை கைது செய்ய பிடியானையும் பிறப்பிக்கப்பட்டது. அதன் பேரில் நடராஜனை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.