மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ஸ்டாவில் பைக் வீலிங் ரீல் வீடியோ.. சைக்கோ ஸ்டண்ட்ஸ் ஆஷிக் உசேனை கோழிபோல தூக்கிய காவல்துறை.!
இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து வீடியோ வெளியிட்டு வந்த சைக்கோ ஸ்டண்ட்ஸ் ஆஷிக் உசேனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகரில் உள்ள பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் செயல்கள் அதிகரித்து வந்தன. இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்படுவீர்கள், சிறார்கள் குற்றத்தில் ஈடுபட்டால் பெற்றோரின் மீது நடவடிக்கை பாயும் என சென்னை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.
மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் நபர்களை கைது செய்யவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பின்னர் 37 பேர் தற்போது வரை இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சாகசத்தில் ஈடுபடுபவர்கள் இன்ஸ்டா, முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவு செய்வதால், அதனை கண்காணித்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கோயம்பேடு 100 அடி சாலை புதிய மேம்பாலத்தில் இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று சாகசம் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ அதிகாரிகள் கண்களில் சிக்க, வாகனத்தின் நம்பர் மற்றும் அடையாளம் வைத்து, பூந்தமல்லியை சேர்ந்த ஆஷிக் உசேன் (வயது 19) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவரின் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர் சைக்கோ ஸ்டண்ட்ஸ் என்ற பெயரில் இன்ஸ்டா கணக்கு தொடங்கி அதில் பல்வேறு சாகச விடீயோக்களை பதிவு செய்ததும் அம்பலமானது. இதனையடுத்து, பைக் சாகசம் தொடர்பாக இருந்த விடீயோக்களை அதிரடியாக நீக்கிய அதிகாரிகள், ஆஷிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.