மின்சாரம் துண்டிக்கப்படும் என SMS வருகிறதா?.. மக்களே உஷார்.. பணம்பறிப்பு கும்பல் கைவரிசை.. சென்னை காவல்துறை எச்சரிக்கை.!



CHENNAI POLICE ADVICE TO TN PEOPLES ABOUT EB BILL FRAUD

 

தங்களின் செல்போன் நம்பருக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நம்பரை தொடர்பு கொள்ளாமல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமீபமாகவே சைபர் கிரைம் குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற புதுப்புது யுக்திகளை கையாள்கின்றனர். பொதுமக்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மின் இணைப்பு இரவோடு இரவாக துண்டிக்கப்படும். மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் மின் அதிகாரி நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் என வாட்சப் நம்பரையும் அனுப்பி வைக்கின்றனர். 

chennai police

பின்னர், பொதுமக்களிடம் அவர்களின் செல்போனில் Any Desk / Quick Support போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வைத்து நமது செயல்பாடுகளை கவனித்து நமது வங்கிக்கணக்கின் தனிப்பட்ட விபரங்களை கண்காணித்து அதனை அவர்களே எடுத்துக்கொள்வார்கள். இதனால் போலியான குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம். மின்வாரியத்தில் இருந்து குறுந்தகவல், போன் அழைப்புகள் வராது என்பதால் கவனத்தில் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.