மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போனில் ஆபாசமாக பேசி, பெண்ணுக்கு ஆ., வீடியோ அனுப்பிய ஆசாமி : முகநூலில் பேச முடியாததால் ஆத்திரம்.!
இளம் பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் சுயதொழில் செய்து வரும் பெண்ணுக்கு, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி செல்போனில் மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார்.
மறுமுனையில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய நபர், அவருக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி காவல்துறை நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெண் வசித்து வரும் அதே தெருவில் இருக்கும் ராஜேஷ் என்பவர் இச்செயலில் ஈடுபட்டது அம்பலமானது.
சம்பவத்தன்று பெண்ணுடன் அவர் முகநூலில் பேச முயற்சித்த நிலையில், அப்பெண்ணின் கணவர் ராஜேஷை கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்தவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது உறுதியானது.
காவல் நிலையத்திற்கு புகார் சென்ற தகவலறிந்து தலைமறைவான ராஜேஷின் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரின் மனைவியை பேச வைத்து ராஜேஷை நேரில் வரவைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.