திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருட்டு வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை; உப்பு உண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை போல கைது.!
30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள போரூர் பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம். இவரின் வீட்டில் கடந்த 1993-ல் 4 பேர் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் ரூ.15 ஆயிரம் ரொக்கம், 30 சவரன் நகைகளை இக்கும்பல் களவாடி சென்றது. இந்த விஷயம் தொடர்பாக போரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முத்து, மகேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சக்திவேல் தலைமறைவாக இருந்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், இன்று சக்திவேலை பெரும்பாக்கத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.