மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. காதலன் உட்பட 4 பேர் அதிர்ச்சி செயல்.. சென்னையில் பயங்கரம்.!
பள்ளியில் படிக்கும் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் கொடுத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது.
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 13 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி ராமாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 13 வயதாகும் சிறுமியை, ராமாபுரம் அடுக்குமாடி குடியிருப்பதை சேர்ந்த இளைஞர் காதல் வலையில் வீழ்த்தியதாக தெரியவருகிறது.
பருவக் கோளாறில் காதல் மாயை அறியாத சிறுமியும் இளைஞருடன் காதல் வயப்பட்ட, கடந்த வாரம் சிறுமியை இளைஞன் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கமடைய வைத்துள்ளான்.
பின்னர், தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், நினைவு திரும்பி கண்ணீருடன் வந்த சிறுமி வீட்டில் எதுவும் தெரிவிக்காமல் சோர்வுடன் காணப்பட்டு வந்துள்ளார். பெற்றோர் மகளை கவனித்து விசாரித்தபோது உண்மை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பின்னர், சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியவன், அவனின் நண்பர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு போதைப்பொருள் எப்படி கிடைத்தது? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது.