திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விடியவிடிய தியேட்டர் உரிமையாளரின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை.!
சென்னையில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அபிராமி தியேட்டரின் உரிமையாளர் ராமநாதன். இவரின் வீடு போயஸ் கார்டன் பகுதியில் உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் ராமநாதனின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, அவரது மேலாளர் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற வருகிறது. நேற்று காலை முதலாக திமுக அமைச்சர், அவருடன் தொடர்பில் இருக்கும் முக்கியப்புள்ளிகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.