20 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காமுகன்.. குண்டர் சட்டம் பாய்ச்சிய அதிகாரிகள்.. அதிரடி நடவடிக்கை.!



Chennai Purasaiwakkam Man Cheated 20 Girls Police Arrest Under Goonda Act

மாடலிங் துறையில் பணியாற்றிய 3 பெண்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி சீரழித்த கயவன் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள புரசைவாக்கம் மில்லர்ஸ் தெருவில் வசித்து வருபவர் முகம்மது செய்யது (வயது 26). இவர் விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில், தன்னுடன் பணியாற்றிய 3 மாடலிங் பெண்களை காதலிப்பதாக நடித்து பாலியல் பலாத்காரம் செய்து கைவிட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

மேலும், பெண்கள் தங்களின் புகாரில், முகம்மது தங்களைப்போல 20 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின. 

chennai

முகம்மது சிறுவயதில் இருந்து நல்ல உடல்வாகை கொண்டு இருந்ததால், அப்போதில் இருந்தே பெண்களுக்கு வலைவிரித்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்ததும், பின்னாளில் மாடலிங் துறைக்கு வந்ததும் அதையே வாடிக்கையாக்கியதும் உறுதியானது. இவனால் 20 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டதும் உறுதியானது. 

இதனையடுத்து, முகம்மது செய்யத்தின் மீது காவல் துறையினர் 5 க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட முகம்மதின் மீது குண்டர் சட்டம் பாய்ச்சவும் சிபாரிசு செய்யப்பட்ட நிலையில், நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.