திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சரக்கடிக்க பணம் கொடுக்காத நண்பனுக்கு ஒரே பன்ச்.. சிதறிப்போன பற்கள்.. சென்னையில் சம்பவம்.!
![Chennai Purasaiwakkam Man Punch Friend He Did not Give Money to buy Drinks Liquor](https://cdn.tamilspark.com/large/large_fight-44312-1200x630.jpg)
மதுபானம் அருந்த நண்பன் பணம் தர மறுப்பு தெரிவித்ததால், அவரின் பல்லை உடைத்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 48). இவர் கடந்த 21 ஆம் தேதி இரவு நேரத்தில் வேப்பேரி, அருணாச்சலம் தெருவில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, அவரின் நண்பர் கோபி, நாகரத்தினத்தை இடைமறித்து மதுபானம் அருந்த பணம் கேட்டுள்ளார். நாகரத்தினமோ பணம் என்னிடம் இல்லை என்று கூறி மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த கோபி நண்பரை ஆபாசமாக வசைபாடி இருக்கிறார்.
ஆத்திரத்தில் நாகரத்தினத்தின் முகத்தில் தாக்குதல் நடத்தியதால், அவரின் பல் உடைந்து கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட நாகரத்தினம் வேப்பேரி G1 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபியை (வயது 31) கைது செய்து சிறையில் அடைத்தனர்.