#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாயின் புதிய கணவரால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.! பறிபோன உயிர்..!
சென்னையில் உள்ள பி.வி காலனி பகுதியில் வசித்து வருபவர் திவ்யா. இவருக்கு திருமணம் முடிந்து கணவர், 2 குழந்தைகள் இருக்கின்றனர். தம்பதிகளுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக, திவ்யா தனது இரண்டு குழந்தைகளுடன் தனியே வசிக்கிறார்.
இந்நிலையில், அரசியல்கட்சி பிரமுகரின் வீட்டில் வேலை பார்த்துவந்த திவ்யாவுக்கும், அவருடன் பணியாற்றி வந்த சீனிவாசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது தகாத உறவாக மாறி இருக்கிறது. இதனால் அவ்வப்போது சீனிவாசன் திவ்யாவின் வீட்டிற்கு நேரிலும் சென்றுவந்துள்ளார்.
அங்கு திவ்யாவின் 6 வயது பெண் குழந்தையை அடித்து துன்புறுத்திய சீனிவாசன், ஒருகட்டத்தில் திவ்யாவை புழல் பகுதியில் தனியே வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று சிறுமி குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தினரிடமும் எதுவும் கூறாமல் சென்றதால், சந்தேகித்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், மருத்துவமனையிலும் சிறுமியின் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் சீனிவாசனை விசாரணை செய்து வருகின்றனர்.