தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தொடரும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.! தனி வார்டுகளாக மாறும் ரயில்வே பெட்டிகள்..!
கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் தமிழகத்தில் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் அனைத்து அரசு மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதனை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனையாக மாற்றி 200 மருத்துவர்கள் 200 செவிலியர்கள் 100 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 180 தூய்மை பணியாளர்கள் 40 பாதுகாவலர்களை பணியமர்த்த உத்தரவு பிறப்பித்தது.
மேலும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒருவேளை கொரோனா பாதிப்பு அதிகமானால் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு வசதியை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
#COVID19 மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு சிகிச்சையளிக்க,
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 27, 2020
200 மருத்துவர்கள்
200 செவிலியர்கள்
100 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள்
180 தூய்மை பணியாளர்கள்
40 பாதுகாவலர்களை பணியமர்த்த உத்தரவு. pic.twitter.com/2hiAMYBqxO
அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணியில் தெற்கு ரயில்வே செயல்பட்டு வருகிறது. தற்போது எந்த ரயில்களும் இயங்காமல் இருப்பதால் அந்த ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக பயன்படுத்தும் யோசனை பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.