மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரயில்வே ஊழியரின் அலட்சியத்தால் கை-கால்கள் துண்டிக்க ரணகொடூரமாக மரணம்... ஊழியரே விதியை மீறியதால் பரிதாபம்.!
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீரஜ்குமார் (வயது 32), தெற்கு இரயில்வேயில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று காலை பணி நிமித்தமாக சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து அண்ணனூருக்கு மின்சார இரயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தார்.
அப்போது, இவர் வாசல் பகுதியில் நின்று பயணித்ததாக கூறப்படும் நிலையில், பேசின் பாலம் பகுதியில் இரயில் வந்தபோது, தீரஜ் ஓடும் இரயிலில் இருந்து இறங்க முயற்சித்து இருக்கிறார். அப்போது திடீரென நிலைதடுமாறிய அவர், கீழே விழுந்து இரயில் பெட்டிகளுக்கு இடையே கை-கால்கள் சிக்கி சக்கரம் ஏறி-இறங்கியதில் உடல் துண்டு துண்டாகியது.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன பயணிகள், இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் பலனில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.