மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் வெளுத்து வாங்கும் மழை; நிம்மதி பெருமூச்சு அடைந்த மக்கள்.!
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சென்னையில் தற்போது வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் தண்ணீருக்காக தினந்தோறும் அவதிப்படும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர்.
இருந்தாலும் மக்களுக்கு தேவையான தண்ணீரின் அளவு கிடைப்பதில் சிரமம் நீடித்து வருகிறது. மழை பெய்ய வேண்டி பல்வேறு இடங்களில் சிறப்பு சிறப்பு பூஜை யாகங்களும் நடத்தப்பட்டது. தொடர்ந்து எதிர்கட்சிகள் அரசின் அணுகுமுறையை விமர்சித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் பல பகுதிகளில் மிதமான முதல் கனமான மழை பெய்து வருகிறது. தண்ணீரின் அருமையை உணர்ந்த மக்கள் பலரும் மழைநீரை சேகரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இன்று, பெருங்களத்தூர், தாம்பரம், வண்டலூர், அசோக் நகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதேபோல் ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், வில்லிவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அரும்பாக்கம், தி நகர், வளசரவாக்கம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
It's finally pouring ! Dear #chennai , kindly harvest it that water. Remember, we still have a drought like situation going on and we need water in our taps ; not just stagnated on the roads. #chennairains #Monsoon2019#ChennaiWaterCrisis@TheQuint pic.twitter.com/yKtCR5nCw3
— Smitha T K (@smitha_tk) June 26, 2019
மேலும், மழை மேகங்கள் வெப்பத்தால் தூண்டப்பட்டு, இன்று இரவு சென்னையில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த மழை ஆவடி, அம்பத்தூரில் இருந்து அப்படியே சென்னைக்குள் நுழையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Chennai & KTC rain update
— TamilNadu Weatherman (@praddy06) June 26, 2019
Well we missed widespread rains yesterday but today should not be miss and as the clouds triggered by heat and the UAC has covered wide area. The UAC is NE of Chennai so storms will come from NW direction. Gateway of rains will be from Avadi and Ambattur pic.twitter.com/Ux2m7vkiuA
மழை வராதா? தண்ணீர் பஞ்சம் தீராதா? என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேனின் செய்தி நிம்மதி பெருமூச்சை கொடுத்துள்ளது.