திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. 2 பேர் பலி.!
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் அதிக கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் புறநகர் பகுதியான மாங்காடு பகுதியில் வசித்து வந்த ஈஸ்வரிக்கு யுவன் சங்கர், மதன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களது வீட்டிற்கு மனோஜ் என்பவர் உறவினராக வந்துள்ளார். இந்த நிலையில் காத்து வாங்குவதற்காக ஜன்னலை திறக்க மதன் முயன்ற போது ஜன்னலுக்கு வெளியே இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் கை தவறுதலாக பட்டு மின்சாரம் தாக்கி அலறி துடித்தார்.
இதனையடுத்து மதனை காப்பாற்ற மனோஜ் அவரது கையை பிடித்து இழுக்கவே அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் அலகுகள் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் ஈஸ்வரி மற்றும் சகோதரர் யுவன் சங்கரும் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.