புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.



Chennai rain update

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த வழிமண்டல மேலடுக்கு சுழற்சியானது குமரி கடல் முதல் ஆந்திரா வரை நீடித்துவருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்துவருகிறது.

குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது. சென்னையை பொறுத்தவரை இரவு 12 மணிக்கு மேல் கனமழை பொழிந்தது.

Rain update

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளதாகவும், அப்படி  மாறினால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.