மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலேஜ் பீஸை ஆன்லைன் ரம்மியில் இழந்த கல்லூரி மானவர் மாயம்.. தந்தை கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார்.!
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான கல்லூரி மாணவர் கல்லூரி கட்டணத்தையும் முதலீடு செய்து இழந்து மாயமாகியுள்ளார்.
சென்னையில் உள்ள ராமாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ முதல் ஆண்டு படித்து வரும் மாணவர் சரத்குமார் திவாரி. இவர் பீகார் மாநிலத்தை சார்ந்தவர் ஆவார்.
தற்போது விடுதியில் தங்கியிருந்தவாறு கல்லூரியில் படித்து வரும் நிலையில், அவரது தந்தை ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இது கல்லூரி கட்டணம் செலுத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான சரத்குமார் திவாரி, தனது தந்தை கொடுத்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். இதனால் மீண்டும் தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.
உண்மையை அறிந்த சரத்குமார் திவாரியின் தந்தை மகனை கண்டிக்கவே, மனமுடைந்த இளைஞர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து மாயமாகியுள்ளார். இதனால் அவர் தலைமறைவாகி இருக்கிறாரா? தற்கொலை செய்துகொண்டாரா? என்ற பயம் எழுந்து இருக்கிறது. திவாரியின் தந்தை கொடுத்த புகாரியின் பேரில் அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.