மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மெட்ரோ இரயில் கட்டுமான பணியில் விபத்து; அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உட்பட 3 பேர் படுகாயம்.!
சென்னையில் உள்ள ராமபுரம் பகுதியில் இரண்டாம்கட்ட மெட்ரோ இரயில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக பிரம்மாண்ட தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தூண்கள் அமைக்க பயன்படும் கம்பிகள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில், 30 அடி நீளத்திற்கு இருக்கும் கம்பிகள், கட்டுமான தலத்தில் இருந்து கிரேன் உதவியுடன் தூக்கப்பட்டுள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் குன்றத்தூரில் இருந்து ஆலத்தூர் பணிமனை நோக்கி சென்ற சென்னை மாநகர அரசு பேருந்து மீது கிரேன் சாயந்துள்ளது. இதில், பேருந்தின் முன்புறம் அப்பளம் போல நொறுங்கியது. பேருந்து பணிமனைக்கு சென்ற காரணத்தால், அப்பேருந்துக்குள் போக்குவரத்து கழக ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.
விபத்தில் காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர்கள் அய்யாதுரை, பூபாலன், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ரஞ்சித் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது.