#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜெயிலர் படம்பார்த்துவிட்டு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்; மின்சார இரயில் அலட்சிய பயணம் ஆபத்தில் முடிந்த பயங்கரம்.!
ஜெயிலர் படம்பார்த்துவந்த இளைஞர் பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவர் டிப்ளோமா பயின்று முடித்துவிட்டு, வாலாஜா பகுதியில் செயல்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று செல்வம் தனது நண்பர்களுடன் வடபழனியில் இருக்கும் திரையரங்கில் ஜெயிலர் படம்பார்க்க வந்து, மீண்டும் தாம்பரம் நோக்கி மின்சார இரயிலில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, கூட்டம் இருந்த நெரிசல் பெட்டியில் ஏறி தொங்கியவாறு பயணம் செய்த செல்வம், குரோம்பேட்டை கடந்து இரயில் செல்லும்போது கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்து பலியாகினர்.
இந்த சம்பவம் அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.