மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை ராயப்புரத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.! நேற்று ஒரே நாளில் 12 பேர் பாதிப்பு!
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது வட சென்னை பகுதியான ராயப்புரம் தான். ராயப்புரத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தமாக இதுவரை 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து திருவிக நகரில் 26, அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் 22, தண்டையார்பேட்டை 17, தேனாம்பேட்டை 14, பெருங்குடி மற்றும் அடையாறில் 6, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.